Tuesday, January 19, 2010

Rich and Poor!

கஹ்பு இப்னு இயாழ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை உண்டு. என் சமுதாயத்திற்குச் சோதனை, செல்வம் (பெருகுவது) தான்' என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 481)


அப்துல்லா இப்னு ஷிக்கீர் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''அல்ஹாகுமுத்த காஃதுரு... எனத்துவங்கும் அத்தியாயத்தை நபி(ஸல்) அவர்கள் ஓதிக் கொண்டிருக்கும் போது, அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் ஆதமின் மகன், ''இது என்னுடையது. இது என்னுடையது என்கிறான் (ஆனால்) ஆதமின் மகனே! நீ சாப்பிட்டு அழித்தது, அல்லது நீ உடுத்திக் கிழித்தது. அல்லது நீ தர்மம் செய்து முடித்து விட்டதைத் தவிர வேறு எதுவும் உனக்கு என உள்ளதா? என்று கேட்டார்கள்.(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 483)

அப்துல்லா இப்னு முஹஃப்பல் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களை நேசிக்கிறேன்' என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார். 'நீ கூறுவதை நன்கு சிந்தித்துக் கூறு' என்று நபி (ஸல்) கூறினார்கள். 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களை நான் நேசிக்கிறேன்' என மூன்று முறை கூறினார். 'என்னை நீ விரும்புவதாக இருந்தால், வறுமையை சந்திக்க நீ தயாராகிக் கொள்வாயாக! என்னை விரும்புகின்றவருக்கு, வெள்ள நீர் தன் இறுதி எல்லையை தொட ஓடுவது போல் வறுமையும் மிக தீவிரமாக வரும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.(திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 484)

அப்துல்லா இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''நபி(ஸல்) அவர்கள் ஓர் ஓலைப்பாயின் மீது படுத்து உறங்கினார்கள். அவர்களின் விலாப்புறத்தில் அதன் தடயம் ஏற்பட்டது. 'இறைத்தூதர் அவர்களே! உங்களுக்காக நாங்கள் ஒரு மெத்தையை ஏற்படுத்தித் தரலாமா?' என்று கேட்டோம். ''எனக்கும் இந்த உலகத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? ஒரு பயணி ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து, பின்பு ஓய்வெடுத்து, அதை விட்டும் செல்வான் அல்லவா! அது போன்றே தவிர நான் இவ்வுலகில் இல்லை'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 486)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. நூல்: புகாரி,முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

No comments:

Post a Comment