இணையத்தில் உலவியவைகள்:
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்
2. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
3. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
4. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள். குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது நல்லது.
5. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
6. சொல்வது யார் என்பது முக்கியமல்ல. சொல்லப்படுவது என்ன என்பதே முக்கியம்
7. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்
8. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
9. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
10. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
No comments:
Post a Comment